குறள் 921
பொருட்பால் (Wealth) - கள் உண்ணாமை (Not Drinking Palm-Wine)
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார்.
பொருள்: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
Foes fear not who for toddy craze The addicts daily their glory lose.
English Meaning: Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).