குறள் 904
பொருட்பால் (Wealth) - பெண்வழிச் சேறல் (Being led by Women)
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று.
பொருள்: மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
Fearing his wife salvationless The weaklings' action has no grace.
English Meaning: The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.