குறள் 892

பொருட்பால் (Wealth) - பெரியாரைப் பிழையாமை (Not Offending the Great)

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

பொருள்: ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

To walk unmindful of the great
Shall great troubles ceaseless create.

English Meaning: To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.