குறள் 877
பொருட்பால் (Wealth) - பகைத்திறம் தெரிதல் (Knowing the Quality of Hate)
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து
பொருள்: துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
To those who know not, tell not your pain Nor your weakness to foes explain.
English Meaning: Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.