குறள் 868
பொருட்பால் (Wealth) - பகை மாட்சி (The Might of Hatred)
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப்பு உடைத்து.
பொருள்: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
With no virtue but full of vice He loses friends and delights foes.
English Meaning: He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.