குறள் 84

அறத்துப்பால் (Virtue) - விருந்தோம்பல் (Hospitality)

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

The goddess of wealth will gladly rest
Where smiles welcome the worthy guest.

English Meaning: If a person warmly welcomes each good guest with a smile, good fortune will happily stay in his home. This means that kindness and hospitality attract blessings and prosperity.