குறள் 806
பொருட்பால் (Wealth) - பழைமை (Familiarity)
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
பொருள்: உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.
They forsake not but continue In friendship's bounds though loss ensue.
English Meaning: Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.