குறள் 796
பொருட்பால் (Wealth) - நட்பு ஆராய்தல் (Investigation in forming Friendships)
கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல்.
பொருள்: கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.
Is there a test like misfortune A rod to measure out kinsmen?
English Meaning: Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations.