குறள் 769

பொருட்பால் (Wealth) - படைமாட்சி (The Excellence of an Army)

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

பொருள்: தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.

Army shall win if it is free
From weakness, aversion, poverty.

English Meaning: An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.