குறள் 765
பொருட்பால் (Wealth) - படைமாட்சி (The Excellence of an Army)
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.
பொருள்: எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
The real army with rallied force Resists even Death-God fierce.
English Meaning: That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.