குறள் 761

பொருட்பால் (Wealth) - படைமாட்சி (The Excellence of an Army)

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாம் தலை

பொருள்: எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

The daring well-armed winning force
Is king's treasure and main resource.

English Meaning: The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.