குறள் 758

பொருட்பால் (Wealth) - பொருள்செயல்வகை (Way of Accumulating Wealth)

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

பொருள்: தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

Treasures in hand fulfil all things
Like hill-tuskers the wars of kings.

English Meaning: An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.