குறள் 749
பொருட்பால் (Wealth) - அரண் (The Fortification)
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண்.
பொருள்: போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
A fort it is that fells the foes And gains by deeds a name glorious.
English Meaning: A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.