குறள் 747
பொருட்பால் (Wealth) - அரண் (The Fortification)
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண்
பொருள்: முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.
Besieging foes a fort withstands Darts and mines of treacherous hands.
English Meaning: A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.