குறள் 741

பொருட்பால் (Wealth) - அரண் (The Fortification)

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

பொருள்: (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

The fort is vital for offence
Who fear the foes has its defence.

English Meaning: A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.