குறள் 720

பொருட்பால் (Wealth) - அவை அறிதல் (The Knowledge of the Council Chamber)

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

பொருள்: தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

To hostiles who wise words utters
Pours ambrosia into gutters.

English Meaning: To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.