குறள் 718

பொருட்பால் (Wealth) - அவை அறிதல் (The Knowledge of the Council Chamber)

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

பொருள்: தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

To address understanding ones
Is to water beds of growing grains.

English Meaning: Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).