குறள் 706
பொருட்பால் (Wealth) - குறிப்பு அறிதல் (The Knowledge of Indications)
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.
பொருள்: தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
What throbs in mind the face reflects Just as mirror nearby objects.
English Meaning: As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.