குறள் 689

பொருட்பால் (Wealth) - தூது (The Envoy)

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் -
வாய்சோரா வன்க ணவன்.

பொருள்: குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.

The envoy who ports the king's message
Has flawless words and heart's courage.

English Meaning: He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).