குறள் 671

பொருட்பால் (Wealth) - வினைசெயல்வகை (Modes of Action)

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

பொருள்: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.

When counsel takes a resolve strong
Weak delay of action is wrong.

English Meaning: Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil,”