குறள் 669

பொருட்பால் (Wealth) - வினைத்திட்பம் (Power in Action)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.

பொருள்: (முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.

Do with firm will though pains beset
The deed that brings delight at last.

English Meaning: Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).