குறள் 618

பொருட்பால் (Wealth) - ஆள்வினையுடைமை (Manly Effort)

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

பொருள்: நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

Misfortune is disgrace to none
The shame is nothing learnt or done.

English Meaning: Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.