குறள் 604
பொருட்பால் (Wealth) - மடியின்மை (Unsluggishness)
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றில வர்க்கு.
பொருள்: சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth.
English Meaning: Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.