குறள் 602
பொருட்பால் (Wealth) - மடியின்மை (Unsluggishness)
மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.
பொருள்: தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.
To make your home an ideal home Loath sloth as sloth; refuse it room.
English Meaning: Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.