குறள் 59
அறத்துப்பால் (Virtue) - வாழ்க்கைத் துணைநலம் (Spousal Goodness)
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.
பொருள்: புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.
A cuckold has not the lion-like gait Before his detractors aright.
English Meaning: A man whose wife does not uphold her chastity and virtue cannot carry himself with pride or confidence, especially before those who criticize. Thiruvalluvar emphasizes that a couple's shared moral integrity is essential for maintaining dignity and honor in society.