குறள் 543
பொருட்பால் (Wealth) - செங்கோன்மை (The Right Sceptre)
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.
பொருள்: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
The Sage's scripture and virtue spring From the sceptre of a stately king.
English Meaning: The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.