குறள் 533

பொருட்பால் (Wealth) - பொச்சாவாமை (Unforgetfulness)

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

பொருள்: மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.

Forgetful nature fails of fame
All schools of thinkers say the same.

English Meaning: Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.