குறள் 525

பொருட்பால் (Wealth) - சுற்றந் தழால் (Cherishing Kinsmen)

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

பொருள்: பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

Loving words and liberal hand
Encircle kith and kin around.

English Meaning: He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.