குறள் 50

அறத்துப்பால் (Virtue) - இல்வாழ்க்கை (Married Life)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.

He is a man of divine worth
Who lives in ideal home on earth.   

English Meaning: A person who lives an ideal, righteous married life on earth earns a place among the divine in heaven. Thiruvalluvar suggests that fulfilling one's responsibilities with virtue and integrity in the domestic state is as exalted as achieving spiritual greatness.