குறள் 48

அறத்துப்பால் (Virtue) - இல்வாழ்க்கை (Married Life)

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள்: மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

Straight in virtue, right in living
Make men brighter than monks praying. 

English Meaning: A householder who lives without deviating from virtue and supports ascetics in their path demonstrates greater endurance and commitment than even those who practice strict penance.