குறள் 432

பொருட்பால் (Wealth) - குற்றங்கடிதல் (The Correction of Faults)

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

பொருள்: பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

Mean pride, low pleasure, avarice
These add blemishes to a prince.

English Meaning: Avarice, undignified pride, and low pleasures are faults in a king.