குறள் 423

பொருட்பால் (Wealth) - அறிவுடைமை (The Possession of Knowledge)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பொருள்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

To grasp the Truth from everywhere
From everyone is wisdom fair.

English Meaning: To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.