குறள் 365
அறத்துப்பால் (Virtue) - அவாவறுத்தல் (Curbing of Desire)
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர்
பொருள்: பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
The free are those who desire not The rest not free in bonds are caught.
English Meaning: They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.