குறள் 357

அறத்துப்பால் (Virtue) - மெய்யுணர்தல் (Truth-Conciousness)

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

பொருள்: ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

One-minded sage sees inner-truth
He is free from thoughts of rebirth.

English Meaning: Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.