குறள் 301
அறத்துப்பால் (Virtue) - வெகுளாமை (Restraining Anger)
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்
பொருள்: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.
Anger against the weak is wrong It is futile against the strong.
English Meaning: He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?