குறள் 282

அறத்துப்பால் (Virtue) - கள்ளாமை (The Absence of Fraud)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால்  கள்வேம் எனல்.

பொருள்: குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.

"We will by fraud win other's wealth"
Even this thought is sin and stealth.

English Meaning: Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.