குறள் 280

அறத்துப்பால் (Virtue) - கூடாவொழுக்கம் (Imposture)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

பொருள்: உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

No balding nor tangling the hair!
Abstain from condemned acts with care.

English Meaning: There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.