குறள் 256

அறத்துப்பால் (Virtue) - புலான்மறுத்தல் (Abstinence from Flesh)

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

பொருள்: புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.

None would kill and sell the flesh
For eating it if they don't wish.

English Meaning: If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.