குறள் 252
அறத்துப்பால் (Virtue) - புலான்மறுத்தல் (Abstinence from Flesh)
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
பொருள்: பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
The thriftless have no property And flesh-eaters have no pity.
English Meaning: As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.