குறள் 238
அறத்துப்பால் (Virtue) - புகழ் (Renown)
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறா விடின்
பொருள்: தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
To men on earth it is a shame Not to beget the child of fame.
English Meaning: Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world.