குறள் 224
அறத்துப்பால் (Virtue) - ஈகை (Giving)
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு
பொருள்: பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
The cry for alms is painful sight Until the giver sees him bright.
English Meaning: To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.