குறள் 209

அறத்துப்பால் (Virtue) - தீவினையச்சம் (Dread of Evil Deeds)

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

பொருள்: ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

Let none who loves himself at all
Think of evil however small.

English Meaning: If a man love himself, let him not commit any sin however small.