குறள் 204

அறத்துப்பால் (Virtue) - தீவினையச்சம் (Dread of Evil Deeds)

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு

பொருள்: பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

His ruin virtue plots who plans
The ruin of another man's.

English Meaning: Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.