குறள் 191

அறத்துப்பால் (Virtue) - பயனில சொல்லாமை (Against Vain Speaking)

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

பொருள்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

With silly words who insults all
Is held in contempt as banal.

English Meaning: He who to the disgust of many speaks useless things will be despised by all.