குறள் 177

அறத்துப்பால் (Virtue) - வெஃகாமை (Not Coveting)

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்

பொருள்: பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

Shun the fruit of covetousness
All its yield is inglorious.

English Meaning: Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.