குறள் 140
அறத்துப்பால் (Virtue) - ஒழுக்கமுடைமை (The Possession of Decorum)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
பொருள்: உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
Though read much they are ignorant Whose life is not world-accordant.
English Meaning: Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.