குறள் 113

அறத்துப்பால் (Virtue) - நடுவு நிலைமை (Impartiality)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்

பொருள்: தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

Though profitable, turn away
From unjust gains without delay.

English Meaning: Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.