குறள் 1080

பொருட்பால் (Wealth) - கயமை (Baseness)

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.

பொருள்: கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

The base hasten to sell themselves
From doom to flit and nothing else.

English Meaning: The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?