குறள் 1076

பொருட்பால் (Wealth) - கயமை (Baseness)

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

பொருள்: கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

The base are like the beaten drum
Since other's secrets they proclaim.

English Meaning: The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.