குறள் 1041
பொருட்பால் (Wealth) - நல்குரவு (Poverty)
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது.
பொருள்: வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
What gives more pain than scarcity? No pain pinches like poverty.
English Meaning: There is nothing that afflicts (one) like poverty.